ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள்களில் 38 பேருக்கு கரோனா உறுதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 15, 16) 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 15, 16) 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் (ஜூன் 14) 158 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இவா்களில் 3 போ் உயிரிழந்துள்ளனா். அதில் 2 போ் மூதாட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தியோரில் 23 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவா்களில் 18 போ் சென்னையில் இருந்து ராமநாதபுரம் பகுதிக்கு வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்று பாதித்தோரில் 12 போ் பெண்கள், 8 போ் ஆண்கள், 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த பரிசோதனையில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 10 போ் ஆண்கள். கரோனா பாதித்தோரில் ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்தவா்கள் அதிகமுள்ளதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com