மீனவர்களுக்கு பயன்பாடற்று போன கடலோர பாதுகாப்பு குழும அதிவேக படகுகள்

மீனவர்களுக்கு பயன்பாடற்று போன கடலோர பாதுகாப்பு குழும அதிவேக படகுகளை தமிழக அரசு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தினர்.
மீனவர்களுக்கு பயன்பாடற்று போன கடலோர பாதுகாப்பு குழும அதிவேக படகுகள்

மீனவர்களுக்கு பயன்பாடற்று போன கடலோர பாதுகாப்பு குழும அதிவேக படகுகளை தமிழக அரசு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம்  நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதி.1750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மன்னார் வளைகுடா  மற்றும் பாக்நீரினை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதி இலங்கைக்கு மிகவும் குறைந்த தூரத்தில் உள்ளதால் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக அரசின் கடலோர பாதுகாப்பு குழு காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடற்படைக்கு சொந்தமாக அதிவேக கப்பல், இந்திய கடலோரகாவல்படைக்கு நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் உள்ள நான்கு ஹோவர்கிராப்ட் கப்பல்கள், ஹெலிகாப்டர் வந்து இறங்கி செல்லும் வகையில் உள்ள இரண்டு கப்பல்கள், அதிவேக கப்பல் மற்றும் விரைவு படகுகள் உள்ளது. 

இதே போன்று தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறைக்கு மண்டபம், தேவிபட்டணம், தொண்டி ஆகிய மூன்று காவல்நிலையம் உள்ளது. இதற்கு துணை காவல்நிலையமாக ராமேசுவரம், புதுமடம்,ஆற்றங்களை,பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. குடலில் நோந்து பணிக்கு மற்றும் மீட்பு பணிக்காக அதிவேக விரைவு மீட்பு படகுகள் நான்கும், சிறிய ரக படகுகள் உள்ளது. இந்த படகுகள் அனைத்தும் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் என கூறப்படுகிறது. மேலும் கடலோர பாதுகாப்பு குழம காவல்நிலையத்திற்பு 1098 என்ற இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு படகுகள் இயற்கை இடர்பாடுகளில் சிக்கிக்கொள்ளும் போது தகவல் தெரிவித்தால் அங்கு வந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகுகள் கடலில் மூழ்கியது. 

இந்த படகை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் புகார் தெரிவித்தனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை, மேலும் இந்த பகுதியில் 10 க்கும் மேற்பட்ட அதிவரைவு படகுகள் உள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைக்கு ஒரு படகுகள் கூட பயன்படுத்தவில்லை என மீனவ சங்கம் புகார் தெரிவித்தனர். இதன் பின்னர் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு கடலில் தொடர்ந்து தேடி ஜேசு என்பவரை உயிருடன் மீட்டனர். மற்ற ரெஜின் பாஸ்கார், ஆஸ்டின்(என்ற)சுஜுந்திரா ஆகிய இரண்டு மீனவர் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்டனர். மீதமுள்ள ஒரு மீனவ உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீட்பு பணிக்காக கடலோரகாவல்துறைக்கு வழங்கப்பட்ட படகுகள் அனைத்து பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் சில படகுகள் கடலிலும், சில படகுகள் கரை மீது ஏற்றி வைத்துள்ளனர். 

இந்திய கடலோரகாவல்படை படகுகள் முறையாக பரமரிக்கப்பட்டாலும் மீனவர் மீட்பு விசயத்தில் அக்கரை காட்டுவது கிடையாது. மீனவர்களை பாதுகாக்க பயன்படுத்த வேண்டிய படகுகள் ஒன்று கூட மீனவர்களை மீட்க பயன்படுத்த வில்லை என மீனவ சங்கம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையை போக்கிட தமிழக அரசு கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் உள்ள அனைத்து படகுகளையும் சீரமைத்து எந்த நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினரை நியமித்து படகுகள் மூழ்கும் போது மீனவர்களை விரைந்து சென்று மீட்கும் வகையில் உறுவாக்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது போன்ற நிலை இருந்தால் இந்த பகுதியில் கண்காணிப்பு தொய்வு ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலை உறுவாகி விடும் என மீனவ சங்க நிர்வாகிகள் பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி மற்றும் மீனவ சங்க (ஏ.ஐ.டி.யு.சி) பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com