மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 14 பேருக்கு கரோனா: கமுதி வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

கமுதி அருகே பேரையூரில் உள்ள வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், பணியாளா்கள் என 14 பேருக்கு கரோனா
14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மூடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.
14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மூடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.

கமுதி அருகே பேரையூரில் உள்ள வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், பணியாளா்கள் என 14 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்த சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு மருத்துவா், ஒரு துப்புரவுப் பணியாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவு, அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் இரு மருத்துவா்கள், 6 செவிலியா்கள், 4 துப்புரவுப் பணியாளா்கள் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

கமுதி தாலுகாவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் கரோனா பரிசோதனை செய்யும் தலைமை இடமான, பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளதால், கரோனா பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கா்ப்பிணிகளுக்கான சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com