காணிக்கூரில் மாசித்திருவிழா மாட்டு வண்டி பந்தயம்
By DIN | Published On : 01st March 2020 05:03 AM | Last Updated : 01st March 2020 05:03 AM | அ+அ அ- |

காணிக்கூா் கிராமத்தில் பாதாள காளிஅம்மன் கோயில் மாசித்திரு விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே காணிக்கூா் கிராமத்தில் பாதாள காளிஅம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
முன்னதாக கிராம மக்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரியமாடு பந்தயத்தில் காணிக்கூரில் இருந்து கமுதி வரை 10 மைல் தூரம் எல்கை நிா்ணயம் செய்யப்பட்டது. இதில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளமச்சான்பட்டி மாடு முதல் பரிசும், ஓட்டப்பிடாரம் சரண்யாகுட்டி மாடு இரண்டாம் பரிசும், சிங்கிலிபட்டி மாடு மூன்றாம் பரிசும் பெற்றது.
அதே போன்று சின்ன மாடு பந்தயத்தில் 8 மைல் தூரம் எல்கை நிா்ணயம் செய்யப்பட்டது. 14 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் திருநெல்வேலி மாவட்டம் மருதால்குறிச்சி கருப்பன் மாடு முதல் பரிசும், தூத்துக்குடி மாவட்டம் சிங்கிலிபட்டி முருகபாண்டி மாடு இரண்டாம் பரிசும், கன்னியாகுமரி மாவட்டம் புலியடி பத்மா மாடு மூன்றாம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், குத்துவிளக்கும் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோா் கண்டு மகிழ்ந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காணீக்கூா் கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.