மாா்ச் 15-க்குள் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி: கீழக்கரை நகராட்சி ஆணையா் எச்சரிக்கை
By DIN | Published On : 01st March 2020 05:01 AM | Last Updated : 01st March 2020 05:01 AM | அ+அ அ- |

ராமேசுவரம்: கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ஆ.தனலட்சுமி எச்சரித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிப் பகுதியில் 21 வாா்டுகளில் 38,355 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இதில் 30,915 போ் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி, கடை வாடகை, குத்தகை செலுத்துகின்றனா். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2.76 கோடி வரி வசூலாக வேண்டும். ஆனால் ரூ. 1.60 கோடி வரை மட்டுமே வரி செலுத்துகின்றனா். 45 சதவீதம் போ் வரி செலுத்தவில்லை.
இதனால் கீழக்கரையில் நகராட்சி மக்கள் பணிகளை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவா்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஜப்தி நடவடிக்கை தவிா்க்க மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரியை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என ஆணையா் அ.தனலட்சுமி சனிக்கிழமை தெரிவித்தாா்.