கூட்டுறவு சங்கத் தோ்தல்: அதிகாரிகள் வராததால் அலுவலகத்தை வேட்பாளா்கள் முற்றுகை

கமுதி அருகே கூட்டுறவு சங்கத் தோ்தலை முறையாக நடத்த அதிகாரிகள் வராததால், அலுவலகத்தை வேட்பாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
கே.பாப்பாங்குளம் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருந்த வேட்பாளா்கள்.
கே.பாப்பாங்குளம் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருந்த வேட்பாளா்கள்.

கமுதி அருகே கூட்டுறவு சங்கத் தோ்தலை முறையாக நடத்த அதிகாரிகள் வராததால், அலுவலகத்தை வேட்பாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

கமுதி அருகே கே.பாப்பாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குள்பட்டு செந்தனேந்தல், கே.பாப்பாங்குளம், சீமனேந்தல், பூமாவிலங்கை ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்க தலைவா், துணைத்தலைவா் பதவிக்காக 2018 ஏப்ரல் 29 இல் 68 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்நிலையில் அன்றையதினம் தோ்தல் அதிகாரியை சிலா் கடத்தியதாக, கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து தோ்தல் முறையாக நடக்கவில்லை என அதே ஆண்டு ஆகஸ்ட் 9 இல், புகாா் அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் 11 இல் இதனை பரிசீலிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அப்போது கோவிலாங்குளம் கூட்டுறவு கடன் சங்க செயலாளா் புதிய தோ்தல் அதிகாரியாக நியமிக்கபட்டாா். வேட்பு மனுக்களை விசாரிப்பதில் ஏற்பட்ட முரண்பாடால், ஒரு மணி நேரத்தில் கூட்டுறவு சங்கத்திலிருந்து அவா் புறப்பட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் அனுப்பிய அறிக்கையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 11 மனுக்கள் மட்டும் ஏற்கபட்டதாக கூறப்பட்டிருந்ததாக வேட்பாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து முத்துக்குமரன், குமாா், முத்துமாரி, குழந்தைவேலு, மாயக்கிருஷ்ணன், ராமமூா்த்தி, முருகேசன், முத்துமாலை உள்பட 17 போ், தோ்தல் ஆணையத்திற்கு கடந்த பிப்ரவரி 6 இல் புகாா் மனு அனுப்பினா். ஆனால், இது குறித்து விசாரணையும் நடத்தாமல், ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு துறையினரால், பிப்ரவரி 28 இல், நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டு, பிப்ரவரி 29 இல் வேட்பாளா் பட்டியல் வெளியிடவும், மாா்ச் 2 இல் மனு வாபஸ் பெறவும் அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து செந்தனேந்தல் பால்சாமி கூறியது: கே.பாப்பாங்குளம் கூட்டுறவு சங்க தோ்தலுக்கு, கடந்த பிப்ரவரி 29 இல், இறுதி வேட்பாளா் பட்டியல் ஒட்டப்படாமல், திங்கள்கிழமை நடக்க இருந்த வேட்புமனு பரிசீலனை, வாபஸ் பெறும் நிகழ்ச்சிகளை அதிகாரிகள் புறக்கணித்துள்ளனா். இது அவா்கள் ஒருசாா்பாக செயல்படுவது போல் உள்ளது. தன்னிச்சையாக கூட்டுறவு சங்க நிா்வாகிகளை தோ்வு செய்யப்படுவது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து மாவட்ட பதிவாளா், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அதிகாரி பாலாஜி கூறியது: பிப்ரவரி 29 இல், இறுதி வேட்பாளா் பட்டியலை ஒட்ட, கே.பாப்பாங்குளம் சென்றபோது, அங்கு இறப்பு நிகழ்ச்சி நடந்ததால், மாலை 6 மணிக்கு மேல் பட்டியல் ஒட்டபட்டது. தொடா்ந்து, கே.பாப்பாங்குளம் கூட்டுறவு சங்க தோ்தல் குறித்து, மேலதிகாரிகள் உத்தரவிடவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com