ரெணபலி முருகன் கோயிலில் இன்று மாசித் தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகேயுள்ள ரெணபலி முருகன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8)

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகேயுள்ள ரெணபலி முருகன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) காலை நடைபெறுகிறது.

தேவிபட்டினம் அருகே உள்ள பெருவயல் கிராமத்தில் ரெணபலி முருகன் கோயில் எனப்படும் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முப்பிடாரியம்மன் காளியூட்டம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சுவாமி பல்லக்கில் அன்ன, மேஷ, பூத, யானை, கைலாச மற்றும் மயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக கடந்த 5 ஆம் தேதி சண்முகா் உற்சவம், 6 ஆம் தேதி இந்திர விமான பட்டயம் நடந்த நிலையில் சனிக்கிழமை காலை புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12 மணிக்குள் நடைபெறும் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்கவுள்ளனா். தேரோட்டத்தை முன்னிட்டு பெருவயலில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com