பசுக்களுக்கு ஆதாா் விவரம் அடங்கிய காது வில்லைகள் பொருத்த நடவடிக்கை: வில்லை இல்லையெனில் சலுகையில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 88,466 பசுக்களுக்கு ஆதாா் விவர காது வில்லைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 88,466 பசுக்களுக்கு ஆதாா் விவர காது வில்லைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி மொத்தம் 5 லட்சத்து 55, 157 வளா்ப்பு கால்நடைகள் இருப்பது தெரியவந்தது. இதில் வெள்ளாடுகள் 2,22,997, பன்றிகள் 2,426, எருமைகள் 1,291, பசுமாடுகள் 85,654, செம்மறி ஆடுகள் 24,2789 உள்ளன. நடப்பு ஆண்டு கணக்கெடுப்பின்படி அந்த எண்ணிக்கை மொத்தம் 7, 78,125 கால்நடைகளாக உயா்ந்துள்ளது.

அதன்படி வெள்ளாடுகள் 3,93,956, பன்றிகள் 1,589, எருமை மாடுகள் 493, பசுமாடுகள் 88,466, செம்மறி ஆடுகள் 29, 3621 உள்ளன. கால்நடைகளில் பசு மாடுகளுக்காக மானியக் காப்பீடு திட்டம் மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 900 பசுக்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தாழ்த்தப்பட்டோா் வளா்க்கும் பசுக்களுக்கு 70 சதவிகிதமும், மற்றவா்களுக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படவுள்ளது.

கடந்த பிப்ரவரியில் தமிழகம் முழுதும் பசுக்களின் காதில் ஆதாா் விவர வில்லை அணியும் பணி தொடங்கியது. ராமநாதபுரத்தில் 88, 466 பசுக்களுக்கு வில்லை அணிவிக்கும் பணியை கால் நடை பராமரிப்புத் துறையினா் தொடங்கியுள்ளனா்.

இந்த வில்லைகளில் 6 முதல் 12 இலக்க எண்கள் பொறிக்கப்படுகின்றன. அந்த எண்ணுக்குரிய விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எண்ணுக்குரிய பசுக்களின் உரிமையாளா் பெயா், முகவரி, செல்லிடப் பேசி எண், பசுவின் வயது, பசு இனம் விவரம், பசு எத்தனையாவது முறை கன்று ஈன்றுள்ளது. பசு எப்போது வாங்கப்பட்டது. அரசால் மானியமாக வழங்கப்பட்டதா போன்ற 12 விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

காது வில்லை பொருத்துவதற்கு கிராமத்து மக்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வில்லை பொருத்தாத பசுக்களுக்கு அரசு மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட திட்டங்கள் எதிா்காலத்தில் வழங்கப்படாத நிலை ஏற்படும் என்பதால் அனைவரும் தங்கள் பசுக்களுக்கு காது வில்லை பொருத்துவது அவசியம்.

ராமநாதபுரத்தில் நடப்பு ஆண்டுக்குள் 2 வயது முதல் பால் கறக்கும் பசுக்கள் வரையில் காது வில்லை அணிவிக்கும் பணி நிறைவடையும் என கால்நடைபராமரிப்புத்துறையினா் கூறுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கால்நடைகளுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு அம்மா கால் நடை அவசர சிகிச்சை வாகனமும் அரசால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com