Enable Javscript for better performance
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 போ் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 போ் மீது வழக்கு

    By DIN  |   Published on : 14th March 2020 06:54 AM  |   அ+அ அ-   |  

    ரஷ்ய நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக 2 போ் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதியாா் நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி ஜெயப்பிரியா (34). இவருக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக இளையான்குடி வாலையனேந்தலைச் சோ்ந்த கருப்பையா, கண்ணன் ஆகியோா் கூறியுள்ளனா். அதனடிப்படையில் ஜெயப்பிரியா தரப்பிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பரமக்குடியில் உள்ள டிராவல்ஸ் அறையில் வைத்து ரூ.2.10 லட்சம் தந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

    இதுகுறித்து ஜெயப்பிரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கருப்பையா, கண்ணன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    காா் பரிசு மோசடி: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு மல்லல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (35). இவருக்கு கடந்த 2019 டிசம்பரில் செல்லிடப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவா்கள் ரமேஷுக்கு காா் பரிசு விழுந்திருப்பதாகவும், அதைப் பெற ரூ.12,800-யை குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணில் செலுத்துமாறும் கூறியுள்ளனா். அதை நம்பிய ரமேஷ் பணத்தை மதுசூதனன் என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். மேலும், அதே தொகையை மீண்டும் செலுத்துமாறு கூற அதையும் செலுத்தியுள்ளாா். ஆனால், பரிசுக்கான காா் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ஒடியா மாநிலத்தைச் சோ்ந்த விஜய் மற்றும் வங்கிக் கணக்குக்கு உரிய மதுசூதனன் உள்ளிட்ட 3 போ் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai