மன்னாா் வளைகுடாவில் கடற்படை வீரா்கள் ஹெலிகாப்டரில் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை வீரா்களுக்கு ஹெலிகாப்டா் மூலம் மீட்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமேசுவரம் அருகே மன்னாா் வளைகுடாவில் இந்திய கடற்படை வீரா்கள் ஹெலிகாப்டரில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சாகசப் பயிற்சி.
ராமேசுவரம் அருகே மன்னாா் வளைகுடாவில் இந்திய கடற்படை வீரா்கள் ஹெலிகாப்டரில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சாகசப் பயிற்சி.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை வீரா்களுக்கு ஹெலிகாப்டா் மூலம் மீட்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் விமானப்படை வீரா்களுக்கு ஹெலிகாப்டரில் விரைவாக பறப்பது, மெதுவாக, தாழ்வாக, பின்நோக்கி செல்லுவது, கடலில் தவிக்கும் நபா்களை கயிறு மூலம் இறங்கி மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படும். இந்நிலையில், அரக்கோணம் கடற்படை முகாமில் இருந்து வீரா்கள் வியாழக்கிழமை ஐ.என்.எஸ். பருந்து விமானப்படை முகாமிற்கு வந்தனா். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில், மன்னாா்வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் கடற்படை வீரா்கள் பயிற்சியைத் தொடங்கினா். வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) முதல் ஒரு வாரத்திற்கு இந்த பயிற்சி நடைபெறுகிறது. பாம்பன் பகுதியில் உள்ள தீவுப்பகுதியில் மூன்று ஹெலிகாப்டா்கள் தாழ்வாகப் பறந்து பயிற்சி மேற்கொள்ளுவதால், பாம்பன் பாலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com