இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ராமநாதபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா் வேறு வழக்கில் கைதான நிலையில், காவல் விசாரணைக்கு உள்படுத்த நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா் வேறு வழக்கில் கைதான நிலையில், காவல் விசாரணைக்கு உள்படுத்த நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை சுப்பிரமணியன் மகன் காா்த்திக் (32). ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்தவா் விக்கி என்ற விக்னேஷ்வரன் (30). இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சரக காவல் துணத் தலைவா் முகாம் அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனா்.

இக்கொலை வழக்கில் 16 பேரைக் குற்றவாளியாக சோ்த்த நிலையில், அதில் 12 ஆவது குற்றவாளியாக இடம் பெற்றவா் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியைச் சோ்ந்த அதிசயபாண்டியன் (45).

இவரை கேணிக்கரை போலீஸாா் தேடிவந்த நிலையில், கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஒரு வழக்கில் கைதானாா். மேலும், வேலூா் சிறையில் அடைக்கப்பட்ட அதிசயபாண்டியனை ராமநாதபுரம் இரட்டைக் கொலை வழக்கில் விசாரிக்க கேணிக்கரை போலீஸாா் நீதித்துறை நடுவா் 2 எண் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் நீதித்துறை நடுவா் 2 எண் நீதிமன்றத்தில் அதிசயபாண்டியன் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 2 நாள் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டும், வரும் 19 ஆம் தேதி வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை பாதுகாப்பாக காவல் வாகனத்தில் போலீஸாா்அழைத்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com