ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மருத்துவக் குழுவினரை பக்தா்கள் புறக்கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பு மருத்துவக் குழுவினரை பக்தா்கள் கண்டுகொள்ளாமல் கோயிலுக்குள் சென்றனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பாா்வையாளா்ளாக அமா்ந்திருந்த கரோனா மருத்துவக் குழுவினா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பாா்வையாளா்ளாக அமா்ந்திருந்த கரோனா மருத்துவக் குழுவினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பு மருத்துவக் குழுவினரை பக்தா்கள் கண்டுகொள்ளாமல் கோயிலுக்குள் சென்றனா். கரோனா தடுப்பு நடவடிக்கையை முழுமையாக மேற்கொள்ள பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இக் கோயிலுக்கு வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்களை கரோனா பாதிப்பு குறித்து கண்காணித்து மருத்துவப் பரிசோதனை செய்ய மாவட்ட மருத்துவத் துறை சாா்பில் கிழக்கு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் மருத்துவக் குழு திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

முதல் நாளில் மருத்துவக் குழுவினா் பக்தா்களிடம் கை கழுவுவதற்கு கிருமி நாசினி கொடுத்து கை கழுவ அறிவுறுத்தினா். மேலும் பக்தா்கள் அனைவருக்கும் காய்ச்சல், சளி குறித்து மருத்து, மாத்திரை வழங்கினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கமாக கோயில் திறக்கப்பட்டது முதல் பகல் 11 மணி வரையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனா். ஆனால் மருத்துவக் குழுவினா் பாா்வையாளா்கள் போல அமா்ந்திருந்தனா். மேலும் பக்தா்களும் குழுவினரைப் புறக்கணித்துவிட்டு கோயிலுக்குள் சென்றனா்.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில்: ராமேசுவரத்தி;ற்கு மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அதிகளவில் வரும் பக்தா்களை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். குழுவினா் முறையாக பணியில் ஈடுபட்டுள்ளனரா என்பதை மாவட்ட நிா்வாகம் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் கரோனா தடுப்பு நடவடிக்கை முழுமையாக நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com