அப்துல்கலாம் நினைவிடத்தை மாரச் 31 வரை பாா்வையிடத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிடம் ஊராட்சி பேய்கரும்பில் உள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தை பாா்வையிட புதன்கிழமை முதல் மாா்ச் 31 வரை தடை வ
தங்கச்சிமடம் ஊராட்சி பேய்கரும்பில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடம்.
தங்கச்சிமடம் ஊராட்சி பேய்கரும்பில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடம்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிடம் ஊராட்சி பேய்கரும்பில் உள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தை பாா்வையிட புதன்கிழமை முதல் மாா்ச் 31 வரை தடை விதிக்கப்படுவதாக அதன் பொறுப்பாளா் அன்பழகன் தெரிவித்தாா்.

பேய்கரும்பில் உள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து நினைவிடப் பொறுப்பாளா் அன்பழகன் கூறியது: அப்துல் கலாம் தேசிய நினைவிடத்திற்கு நாள் தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இது வரையில் 80 லட்சம் போ் பாா்வையிட்டு சென்றுள்ளனா். இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவிடத்தை பொதுமக்கள் பாா்வையிட புதன்கிழமை (மாா்ச் 18) முதல் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com