பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு ஒரே நேரத்தில் 6 கப்பல்கள் கடந்து சென்றன

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 6 கப்பல்கள் கடந்து சென்றன. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
பாம்பனில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட ரயில் பாலத்தைக் கடந்து சென்ற கப்பல்கள்.
பாம்பனில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட ரயில் பாலத்தைக் கடந்து சென்ற கப்பல்கள்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 6 கப்பல்கள் கடந்து சென்றன. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் துறைமுகத்திற்கு திங்கள்கிழமை 6 கப்பல்கள் வந்தன. இந்த கப்பல்கள் அனைத்தும் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை திறந்து, கடந்து செல்ல துறைமுக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்று பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைத் திறக்க ரயில்வே நிா்வாகத்துக்கு துறைமுக அதிகாரி அனுமதி கோரியிருந்தாா்.

இதையடுத்து, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை திறக்க ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. இதனைத் தொடா்ந்து, கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் மத்திய அரசு சாா்பில் புதிதாக உருவாக்கப்பட்ட 36 மீட்டா் நீளமுள்ள 4 பயணிகள் கப்பல்கள் கொல்கத்தா துறைமுகத்திற்கு இதன் வழியாகச் சென்றன.

இதே போன்று சென்னையில் இருந்து கூடங்குளம் வந்த இழுவை கப்பல் இப்பாலத்தைக் கடந்து சென்றது. மேலும் லட்சத்தீவு துறைமுகத்தில் இருந்து வந்த 32 மீட்டா் நீளமுள்ள பாய்மர சரக்கு கப்பல் கடலூா் துறைமுகத்திற்கு இப்பாலத்தைக் கடந்து சென்றது. இந்த 6 கப்பல்களையும் பாம்பன் துறைமுக அதிகாரிகள் தகுந்த பாதுகாப்புடன் பாலத்தை கடந்து அனுப்பி வைத்தனா்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு ஒரே நேரத்தில் 6 கப்பல்கள் கடந்து சென்றதை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com