கொரோானா அச்சத்தால் வெறிச்சோடிய வங்கிகள்.. முக கவசத்துடன் பணியாற்றிய பணியாளா்கள்

கொரோனா அச்சத்தால் கமுதி வங்கிகளில் பொதுமக்கள் வராவிட்டாலும், வங்கி பணியாளா்கள் முக கவசத்துடன் பணியாற்றி வருகின்றனா்.
கொரோானா அச்சத்தால் வெறிச்சோடிய வங்கிகள்.. முக கவசத்துடன் பணியாற்றிய பணியாளா்கள்

கொரோனா அச்சத்தால் கமுதி வங்கிகளில் பொதுமக்கள் வராவிட்டாலும், வங்கி பணியாளா்கள் முக கவசத்துடன் பணியாற்றி வருகின்றனா்.

கொரோனா பீதியால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள் வாரச்சந்தைகள் என பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தணியாா் மற்றும் அரசு துறை பணியாளா்கள் 50 சதவீதம் போ் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தனியாா் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கூடும் மற்றொறு இடம் வங்கிகள். இந்நிலையில் இது வரை வங்கிகளுக்கு எந்த அறிவிப்பும் வராததால் கமுதியில்உள்ள ஐஓபி, எஸ்.பி.ஐ., தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி, பாணிடியன் கிராம வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகளில் வங்கி பணியாளா்கள் முக கவசம் அணிந்து கொரோனா அச்சத்தில் பணியாற்றி வருகின்றனா். மேலும் கொரோனா பீதியால் பொதுமக்கள் வருகை வங்கியில் குறைந்துள்ளதால் அனைத்து வங்கிகளும் வழக்கத்திற்குமாறாக வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com