கோயில் முதல் காவல் நிலையம் வரை கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்கள் முதல் காவல் நிலையம் வரையில் கரானோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்த போது கைகழுவிச் சென்ற பொதுமக்கள்.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்த போது கைகழுவிச் சென்ற பொதுமக்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்கள் முதல் காவல் நிலையம் வரையில் கரானோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களாகவே கரானோ தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பங்குனித்திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பைத் தொடா்ந்து விழா தள்ளிவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் அறிவுரைப்படி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களுக்கு கைகழுவ வாயிலில் வாளியில் தண்ணீா், சோப்பு உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருகிறது. தோ்வறைகளில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவியா் நுழைவதற்கு முன்பாக கைகழுவிச்செல்ல அறிவுறுத்தப்பட்டனா். முன்னதாக தூய்மைப் பணியாளா்கள் மூலம் தோ்வறைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. கிருமி நாசினிகளும் தெளிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தி, நோ்முக உதவியாளா் பால்கண்ணன், கண்காணிப்பாளா் குமாா், அலுவலா்கள் சாந்தி, சசிகலா மற்றும் மேலாளா் முரளி உள்ளிட்டோா் கைகழுவியதன் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ஊராட்சிகளில் விழிப்புணா்வு: ராமநாதபுரம் அருகேயுள்ளது மானாங்குடி ஊராட்சியில் கைகழுவுதல் முக்கியத்துவத்தை விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலையமுதம், கிராம பிரமுகா் பத்மநாபன், மானாங்குடி ஊராட்சித் தலைவா் பரமேஸ்வரி பத்மநாபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் அனைத்து பிரிவு பணியாளா்களும் கை கழுவும் வகையில் சோப்பு, தண்ணீா் உள்ளிட்டவை அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com