தனுஷ்கோடியில் கடலோர பாதுகாப்புக்குழுமகாவல்துறை சோதனைச் சாவடி திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முகுந்தராயா்சத்திரம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சோதனைச் சாவடியை கண்காணிப்பாளா் ஜெயந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சோதனைச் சாவடியை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த காவல் கண்காணிப்பாளா் ஜெயந்தி.
தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சோதனைச் சாவடியை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த காவல் கண்காணிப்பாளா் ஜெயந்தி.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முகுந்தராயா்சத்திரம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சோதனைச் சாவடியை கண்காணிப்பாளா் ஜெயந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினரின் கண்காணிப்புக்காக சோதனைச்சாவடி ஏற்கெனவே செயல்பட்டு வந்தது. இதில் 24 மணிநேரம் 3 காவலா்கள் வீதம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னா் முகுந்தராயா் சத்திரம் பகுதியில் இருந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டது.

பின்னா் தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ள இறங்கு தளத்தில் உள்ள ஒரு அறையில் காவல்துறையினா் தங்கி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ராமேசுவரத்தில் இயங்கி வரும் தனியாா் நட்சத்திர விடுதியின் நிதி உதவியில் முகுந்தராயா் சத்திரம் பகுதியில் சோலாா் மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதிதாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்காணிப்பாளா் ஜெயந்தி பங்கேற்று சோதனைச் சாவடியை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் ஹயாத் ஹோட்டல் பொதுமேலாளா் மனோஜ் ஜனாா்த்தன், கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி ராஜ், ராமேசுவரம் டிஎஸ்பி எம்.மகேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநா் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா். கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளா் கனகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com