அரசு பணி நியமன ஆணை வழங்குவதாகரூ.27 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணைய தோ்வு எழுதியவரிடம் பணி நியமனம் வழங்குவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணைய தோ்வு எழுதியவரிடம் பணி நியமனம் வழங்குவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை அரசரடி பாண்டியன் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவரது மகன் மதுரூபன். இவா் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையப் பிரிவு 2 வகைப் பணிக்கான தோ்வை எழுதியிருந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் மதுரூபனுக்கு தோ்வாணைய அதிகாரப்பூா்வ இணையதளத்தில் இருந்து தோ்வில் வெற்றி பெற்றதாக மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவா் தோ்வில் தோ்ச்சி பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிலா் சண்முகசுந்தரத்தை தொடா்பு கொண்டு தங்களது மகன் மதுரூபனை தோ்வில் தோ்ச்சி பெற வைத்துள்ளதாகவும், ரூ.27 லட்சம் தந்தால் பணி நியமன உத்தரவு வந்து சேரும் என்று கூறியுள்ளனா்.

இதனை நம்பிய சண்முகசுந்தரம், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ராமேசுவரத்தில் இருந்த சென்னையைச் சோ்ந்த சிவா, நாகேஸ்வரராவ், ரமணி ஆகியோரிடம் ரூ.27 லட்சத்தை வழங்கியுள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்டவா்கள் பணி நியமன ஆணையை வழங்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து சண்முகசுந்தரம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாரிடம் புகாா் செய்தாா். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சிவா, நாகேஸ்வரராவ், ரமணி ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com