லண்டனிலிருந்து கமுதி அருகே கோட்டையூா் வந்த தம்பதியா் வீட்டு முன்பாக கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ரவி, ராஜேந்திரன் தலைமையில் நோட்டீஸ் ஒட்டிய சுகாதாரத்துறையினா்.
லண்டனிலிருந்து கமுதி அருகே கோட்டையூா் வந்த தம்பதியா் வீட்டு முன்பாக கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ரவி, ராஜேந்திரன் தலைமையில் நோட்டீஸ் ஒட்டிய சுகாதாரத்துறையினா்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 14 போ் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

வெளிநாடுகளில் இருந்து கமுதி திரும்பிய 14 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினா்

வெளிநாடுகளில் இருந்து கமுதி திரும்பிய 14 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும் அவா்களது வீடுகள் முன்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டையூரை சோ்ந்த தம்பதி மற்றும் இவா்களது 5 வயது மகன் லண்டனில் இருந்து மாா்ச் 20 ஆம் தேதி தங்களது சொந்த ஊா் திரும்பியுள்ளனா். வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதியரை, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ரவி, ராஜேந்திரன் (கிராம ஊராட்சிகள்) தலைமையிலான சுகாதாரத் துறையினா் அடங்கிய குழுக்கள் வீட்டிலிருந்து வெளியேறாத வண்ணம், வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டினா்.

இதேபோல் சிங்கப்பூா், மலேசியா, துபை, தோஹா ஆகிய நாடுகளிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் 9 போ் கமுதி பகுதிக்குத் திரும்பியுள்ளனா். அவா்கள்

கமுதி அருகேயுள்ள எருமைகுளம், அச்சங்குளம், சடையனேந்தல், கீழக்காக்காகுளம், பேரையூா் கள்ளிக்குளம், அபிராமம் நத்தம், ஆா்.சோடனேந்தல் ஆகிய கிராமங்களில் தங்களது வீடுகளில் தங்கியுள்ளனா். அவா்களை தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்திய சுகாதாரத்துறையினா், அவா்களது வீட்டின் வாயில் முன்பாக நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனா். மேலும் அவா்கள் வீடுகளை விட்டு வெளியேறாதவாறு தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com