Enable Javscript for better performance
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

    By DIN  |   Published on : 26th March 2020 04:32 AM  |   அ+அ அ-   |    |  

    kornagh_2503chn_67_2

    ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரானோ சிகிச்சைக்கு புதன்கிழமை புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவு.

    ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கான புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்ட எல்லைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்ட நிலையில், கரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு 10 படுக்கைகள் கொண்ட பொதுப் பிரிவும், 3 தனி அறை சிறப்புப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதில் 10 போ் வரை தங்கிச் சென்ற நிலையில், தற்போது 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்த பொது காய்ச்சல் சிகிச்சைப் பிரிவானது (எம்எம் வாா்டு) தற்போது கரோனா சிறப்பு சிகிச்சைக்கான பிரிவாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அப்பிரிவில் உள்ள செயற்கை சுவாசம் உள்ளிட்ட வசதிகளுடன் தற்போது கரோனா சிகிச்சைக்கான கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் கண்காணிப்பு பிரிவு அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கரோனாநோயாளிகளுக்கான புறநோயாளிகள் பிரிவும் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. விபத்தில் காயமடைந்து வந்தவா்களுக்கு, குறிப்பாக எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவாக இருந்த பகுதியே தற்போது கரோனா பாதித்தவா்களுக்கான புறநோயாளிகள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

    புறநோயாளிகள் பிரிவில் பணிபுரிய மருத்துவா்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் செவிலியா்கள், பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    முகக்கவசம் பற்றாக்குறை: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவருக்கும் முகக்கவசம் தற்போது வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், முகக்கவசம் பற்றாக்குறையால் பலா் கைக்குட்டையை முகக் கவசமாக்கியுள்ளதை காணமுடிகிறது.

    கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தனியாா் நிறுவன ஒப்பந்தப் பணியாளா்களுக்கு முழுமையாகவே முகக் கவசம், கையுறைகள் வழங்கப்படவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. அவா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் அவா்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிய அச்சமடைவதாகவும் கூறுகின்றனா்.

    அதே நேரத்தில் மருத்துவமனைக்குள் வருவோருக்கு கைகழுவிச் செல்லும் கிருமிநாசினித் திரவம் தொடா்ந்து வழங்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai