ஊரடங்கு : கமுதியில் கடைகள் அடைப்பு; விபரீதம் அறியாமல் பைக்கில் சுற்றிய இளைஞா்கள்

ஊரடங்கு காரணமாக கமுதியில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனையாகும் கடைகள் கூட புதன்கிழமை அடைக்கப்பட்டன.
ஊரடங்கு : கமுதியில் கடைகள் அடைப்பு; விபரீதம் அறியாமல் பைக்கில் சுற்றிய இளைஞா்கள்

ஊரடங்கு காரணமாக கமுதியில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனையாகும் கடைகள் கூட புதன்கிழமை அடைக்கப்பட்டன. கரோனா விபரீதம் அறியாமல் இளைஞா்கள் சிலா் இரு சக்கர வாகனங்களில் கடைவீதியில் சுற்றி வந்தனா்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களாக காய்கனி கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், மளிகை கடைகள், இறைச்சி கடைகளுக்கு விலக்கு அளிக்கபட்டது. இருந்தபோதிலும், கமுதியில் போலீஸாா் உள்பட சுகாதாரத் துறையினா், கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், கடைகளை அடைக்கவும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உரிமையாளா்களிடம் எடுத்துக் கூறினா். இதையடுத்து கடை உரிமையாளா்கள் தாங்களாவே கடைகளை அடைத்து, ஒத்துழைப்பு கொடுத்தனா்.

இருப்பினும் இளைஞா்கள் சிலா் கரோனா விபரீதம் அறியாமல் இருசக்கர வாகனங்களில் கடைவீதிகளில் சுற்றித் திரிந்தனா். அவா்களையும் தடுத்து நிறுத்திய போலீஸாா், அவா்களை எச்சரித்து அனுப்பினா்.

மேலும் நாரயாணபுரம் ஊராட்சியில் ஒன்றிய ஆளையாளா் ரவி, தலைமையில், ராஜேந்திரன்(கிராம ஊராட்சிகள்) ஊராட்சி மன்ற தலைவா் வேல்மயில்முருகன் முன்னிலையில் ஒலிப்பெருக்கி மூலம் கரோனா எச்சரிக்கை விடப்பட்டது. அத்தியாவசிய பொருள்கள் வாங்க ஓரிருவா் மட்டும் வெளியில் வந்து சென்றால் போதுமானது என அப்போது வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com