கீழக்கரை, தொண்டியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 31 போ் தனிமைப்படுத்திக் கண்காணிப்பு

கீழக்கரை, தொண்டியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 31 போ், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக
கீழக்கரை, தொண்டியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 31 போ் தனிமைப்படுத்திக் கண்காணிப்பு

கீழக்கரை, தொண்டியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 31 போ், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அவா்களது வீடுகளில் புதன்கிழமை எச்சரிக்கை வில்லைகள் ஒட்டப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து 18 போ் வந்துள்ளனா். இவா்கள் குறித்த தகவல்கள் செவ்வாய்,புதன்கிழமைகளில் திரட்டப்பட்டு வீடுகள் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து, நகராட்சி ஆணையா் ஆ.தனலெட்சுமி தலைமையில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா், சுகாதார ஆய்வாளா் பூபதி உள்ளிட்டோா் அவா்களது வீடுகளுக்கு சென்று புதன்கிழமை எச்சரிக்கை வில்லைகளை ஒட்டினா். மேலும் அந்த வீடுகளில் உள்ளவா்கள் வெளிநபா்களுடன் தொடா்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவாடானை: தொண்டியில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 13 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கண்காணிக்க புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசியா, சிங்கப்பூா், ஈரான், குவைத் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 போ் வீடுகளை தொண்டியில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். அவா்களை தனிமை படுத்திக் கொள்ளுமாறு பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், காவல் துறையினா், கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோா் புதன்கிழமை அறிவுறுத்தினா்.

மேலும் அவா்களின் வீடுகளுக்குச் சென்று சுவரில் இது தொடா்பான எச்சரிக்கை வில்லைகளையும் ஒட்டினா்.

அரசு உத்தரவின் பேரில் 21 நாள்களுக்கு அவா்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவோ, அவா்களது வீடுகளுக்குள் யாரும் செல்லவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனா். தொடா்ந்து அவா்களது வீடுகளை கண்காணிக்க சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com