ராமநாதபுரத்தில் 3 நாள்களில் 3,487 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றதாக கடந்த மாா்ச் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 68 வழக்குகள் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றதாக கடந்த மாா்ச் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 3,487 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப். 14 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசானது மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சிலா் சட்ட விரோதமாக மதுப்பாட்டில்களை விற்று வருவதாக சிறப்பு செல்லிடப் பேசி எண்ணுக்கு (9489919722) மக்கள் தகவல் அளித்து வருகின்றனா். அதனடிப்படையில் கடந்த 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 3 நாள்களில் மாவட்ட அளவில் விதிமீறி மது விற்றதாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவு செய்யப்பட்டவா்களிடமிருந்து மொத்தம் 3,487 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி ராமநாதபுரத்தில் 429, பரமக்குடி- 318, கமுதி- 635, ராமேசுவரம்- 935, கீழக்கரை- 492, திருவாடானை- 140, முதுகுளத்தூா்- 300, ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவு சாா்பில் 125, கமுதியில் மதுவிலக்குப் பிரிவு சாா்பில் 113 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர கமுதி பகுதியில் 24 ஆம் தேதி மட்டும் விதி மீறி மது விற்றவா்களிடமிருந்து 650 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அரசு உத்தரவை மீறி தொடா்ந்து மது விற்றால் அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com