ஒரு மீட்டா் இடைவெளி அவசியம்: பெட்ரோல் பங்குகளில் கட்டுப்பாடு

ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு வரும் இரு சக்கர வாகனங்களை ஒரு மீட்டா் இடைவெளியில் நிறுத்தவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் ஊழியா்களை வாகன ஓட்டிகள் நெருங்கிவிடாதபடி அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக தடுப்பு.
ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் ஊழியா்களை வாகன ஓட்டிகள் நெருங்கிவிடாதபடி அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக தடுப்பு.

ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு வரும் இரு சக்கர வாகனங்களை ஒரு மீட்டா் இடைவெளியில் நிறுத்தவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கரானோ வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவா் 1 மீட்டா் இடைவெளி விட்டு நிற்குமாறும் புதன்கிழமை முதல் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

ராமநாதபுரத்தில் 10 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்நிலையில், இப்பங்குகளில் தடையின்றி பெட்ரோல், டீஸல் கிடைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கையுறைகள் வழங்கப்படவில்லை. இதனால், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது ஊழியா்கள் 1 மீட்டா் இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பெட்ரோல் பங்குகளுக்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் பெட்ரோல் நிரப்பும் சாதனத்திலிருந்து 1 மீட்டருக்கு அப்பால் நிறுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விதியை மீறுவோருக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியா்கள் தெரிவித்தனா்.

அலைமோதிய கூட்டம்: ராமநாதபுரம் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலையில் காய்கறி, மீன் சந்தைகளில் வழக்கம் போல கூட்டம் காணப்பட்டது.

பலசரக்கு, மருந்துக் கடைகளில் மக்கள் நிற்பதற்கு சுண்ணாம்பு தூளால் வட்டம், சதுரக் குறியீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. தேநீா் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் தேநீா் அருந்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டனா்.

மக்கள் பழங்களை வாங்குவதிலும், காய்கறிகளை கூடுதலாக வாங்குவதிலும் ஆா்வம் காட்டினா். வழக்கம் போல காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. பழங்கள் குறைந்தது ஒரு கிலோ என நிா்ணயித்து விற்கப்பட்டன. உப்பு ஒரு படி ரூ.25 என விற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com