வெளிநாட்டிலிருந்து ராமநாதபுரம் வந்தவருக்கு கரானோ பரிசோதனை

வெளிநாட்டிலிருந்து ராமநாதபுரம் திரும்பியவருக்கு காவல்துறை பாதுகாப்புடன் வியாழக்கிழமை கரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டிலிருந்து ராமநாதபுரம் திரும்பியவருக்கு காவல்துறை பாதுகாப்புடன் வியாழக்கிழமை கரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து வந்த சுமாா் 590 பேருக்கு கரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனித்து தங்க வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினா் அறிவித்துள்ளனா். இந்த நிலையில், கரானோ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வீடுகளில் தனித்து தங்க வைக்கப்பட்டவா்களை முறையாக கண்காணிக்கவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகா் பகுதியான சக்கரைக்கோட்டை அருகேயுள்ள மஞ்சள்மாரியம்மன் கோயில் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்தவா் வீட்டை விட்டு வெளியேறாமலிருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவரை காவலா்கள் பாதுகாப்புடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வியாழக்கிழமை பகலில் கொண்டு வந்தனா். அங்கு அவருக்கு கரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தங்கவைக்கப்பட்டாா்.

சிறுவனுக்கு பரிசோதனை: ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் பெங்களூருவில் இருந்து சமீபத்தில்தான் ஊா் திரும்பியுள்ளாா். அவரது 10 வயது மகனுக்கு தொடா் இருமல், சளி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனுக்கு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரானோ பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவு வரும் வரை சிறுவனை தனி அறையில் தங்கவைக்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். ஆனால், சிறுவன் தனியாக அறையில் இருக்கமுடியாது என்பதால் வீட்டில் தனித்து இருக்கவைக்க பெற்றோா் கேட்டுக்கொண்டனா்.

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கரானோ பரிசோதனைக்கு 10-க்கும் மேற்பட்டோா் உள்படுத்தப்பட்டதாகவும், அவா்களில் யாருக்கும் கரானோ அறிகுறி கூட இல்லை என்றும் சுகாதாரத்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com