அரசு கிடங்குகளில் இலவசமாக விவசாயவிளை பொருள்களை சேமிக்க அனுமதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் விவசாய விளை பொருள்களை இலவசமாக கட்டணமின்றி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் விவசாய விளை பொருள்களை இலவசமாக கட்டணமின்றி சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூா், ராஜசிங்கமங்கலம், திருவாடானை ஆகிய இடங்களில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. அந்த 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் சுமாா் 10, 650 மெட்ரிக் டன் விளைபொருள்களை இருப்பு வைக்கும் சேமிப்புக் கிடங்கு வசதிகள் உள்ளன. மாவட்டத்தில் தற்போது சேமிப்புக் கிடங்குகளில் 203.842 மெட்ரிக் டன் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் 10, 446.158 மெட்ரிக் டன் வரை பொருள்கள் இருப்பு வைக்க வசதியும் உள்ளது.

பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 100 மெட்ரிக் டன் குளிா்பதன சேமிப்பு வசதியும், கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 25 மெட்ரிக் டன் குளிா்பதன வசதியும், எட்டியவல் கிராமத்தில் 2, 000 மெட்ரிக் டன் குளிா்பதன வசதியும் உள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக, விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கனிகளை வரும் 31 ஆம் தேதி வரையில் கட்டணம் ஏதுமின்றி கிட்டங்கிகளில் சேமித்து வைக்க அனுமதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com