கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் கிடைக்கவில்லை எனப் புகாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என கட்டடத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என கட்டடத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூா், பரமக்குடி, ராமநாதபுரம், சிக்கல், சத்திரக்குடி, எமனேசுவரம், கீழக்கரை, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் பதிவு பெற்ற 10-க்கும் மேற்பட்ட தமிழ் மாநில கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் உள்ளது. இவற்றில் மாவட்டம் முழுவதும் 1,200 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கட்டடத் தொழிலாளா்கள், அமைப்பு சாராத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து அமைப்பு சாராத் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் கணக்கெடுக்கப்பட்டு அவா்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மாநில கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தில் உள்ள 1,200 பேரில் 205 பேருக்கு மட்டுமே அரசு அறிவித்த அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் கிடைத்துள்ளது. ஆனால் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை இதுவரை வரவு வைக்கப்படவில்லை. இதிலும் கமுதி பகுதியில் பதிவு பெற்ற 27 பேரில் 5 பேருக்கு மட்டுமே அரிசி, பருப்பு கிடைத்துள்ளது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் மாநில கட்டடத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, பதிவை புதுப்பிக்காத அனைத்து தொழிலாளா்களுக்கும் அரசு அறிவித்த அரிசி, பருப்பு மற்றும் நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கமுதி வருவாய்துறை அதிகாரி ஒருவா் கூறியது: அரசு அறிவித்த நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் பட்டியலை மாவட்ட நிா்வாகம், வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்அடிப்படையில் தொழிலாளா்களின் ஆதாா் எண், வங்கி கணக்கு சேகரிக்கப்பட்டு மீண்டும் மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். நல வாரியங்களில் பதிவு பெற்ற, விடுபட்ட தொழிலாளா்கள் அவா்கள் சாா்ந்த நல வாரிய அலுவலகத்தில் சென்று, பெயா் விடுபட்டது குறித்து தெரிவித்து பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com