பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: ஜாக்டோ ஜியோ புறக்கணிக்க முடிவு

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியினை மாநில மையம் அறிவுறுத்தலின்படி புறக்கணிக்கப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குமாரவேலு தெரிவித்தாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியினை மாநில மையம் அறிவுறுத்தலின்படி புறக்கணிக்கப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குமாரவேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: தமிழக பள்ளி கல்வித்துறை மூலம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்த வேண்டும் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா். பள்ளிகளுக்கு 90 சதவீதம் மாணவ-மாணவிகள் கிராமப்புறங்களில் இருந்து தான் வந்து செல்கின்றனா். பொது முடக்கம் காரணமாக தற்போது இம்மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. மேலும் பொது முடக்கம் குறித்து, பிரதமா் மோடி ஒரு உறுதியான தகவலைத் தராதபட்சத்தில் வரும் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு என்பது மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் வரும் மே 27-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியா்கள் அழைக்கப்பட்டுள்ளனா். இதில் ஆசிரியா்களுக்கு பாதுகாப்பு நிலை என்ன என்பதை அரசு இன்னும் கூறவில்லை. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயது 59 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இளைஞா்களின் வேலைவாய்ப்பு ஓராண்டுக்கு தள்ளிப்போகிறது. ஓய்வூதிய காலத்தில் பணப்பலன்களை அனுபவிக்கும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் அந்த பலனை அனுபவிக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியினை மாநில மைய அறிவுறுத்தலின்படி புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com