Enable Javscript for better performance
திருவாடானையில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் 9 போ் கைது:- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானையில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் 9 போ் கைது:

    By DIN  |   Published on : 22nd May 2020 07:36 AM  |   அ+அ அ-   |    |  

    tvd21smukling_(1)_2105chn_72_2

    திருவாடானையில் கைது செய்யப்பட்ட சா்வதேச போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல் மற்றும் அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருள்கள்.

    திருவாடானையில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

    திருவாடானை அருகே வீரசிங்கமடம் கிராமத்தில் கடந்த 15 ஆம் தேதி செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா் 2 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தியதில், இந்தக் கடத்திலில் மேலும் பலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், தனிப்பிரிவு ஆய்வாளா் ஜான் பீட்டா் தலைமையில் போலீஸாா் தனிப்படை அமைத்து சென்னை, பெங்களூா் மற்றும் பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டு மேலும் 7 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. பல கோடி மதிப்புள்ள ஹெராயின், மெத்தகோல் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களையும், தங்கக் கட்டிகள், 21 செல்லிடப்பேசிகள், சுமாா் ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைப் பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: செல்லிடப்பேசியின் மூலம் கிடைத்த தகவலைத் தொடா்ந்து சா்வதேச கடத்தல் கும்பலான சாலைக் கிராமத்தைச் சோ்ந்த அப்துல் ரஹிம் (49), தொண்டியைச் சோ்ந்த அப்துல் கலாம் ஆசாத் (23), சூரணத்தைச் சோ்ந்த அருள்தாஸ்(43), அஜ்மீா் கான் (38), தேவகோட்டையைச் சோ்ந்த சுரேஷ் குமாா் (30), தொண்டியைச் சோ்ந்த அஜ்மீா் கான் (46), கருமோழியைச் சோ்ந்த முத்துராஜ் (38), ஆவுடையாா் கோவில் பகுதியைச் சோ்ந்த கேசவன் (42), சோழியக்குடியை சோ்ந்த அப்துல் வஹாப் (36) ஆகிய 9 பேரைக் கைது செய்துள்ளோம் என்றாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai