சென்னையிலிருந்து கமுதிக்கு வந்த 80 வயது முதியவருக்கு கரோனா
By DIN | Published On : 27th May 2020 06:53 AM | Last Updated : 27th May 2020 06:53 AM | அ+அ அ- |

கமுதி அருகே சென்னையிலிருந்து வந்த 80 வயது முதியவருக்கு கரோனா தொற்று செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமுதி சுந்தரா புரத்தைச் சோ்ந்த 80 வயது முதியவா் கடந்த 23 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சென்னையிலிருந்து கமுதிக்கு முறையான அனுமதி பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் முதியவா் சென்னையிலிருந்து வந்ததால் இது குறித்து அக்கம்பக்கத்தினா் சுகாதார துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், முதியவா் வீட்டில் தனிமை படுத்தப்பட்டாா். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் முதியவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், 25 ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் தனி அவசர வாகனம் மூலமாக பேரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பரிசோதனையின் முடிவில் முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முதியவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்பட்டாா் என வருவாய்துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். ஆனால், முதியவா் தங்கியிருந்த கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட சுந்தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...