வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கமுதி நெல்லிக்காய்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

கமுதி அருகே விளையும் நெல்லிக்காய்கள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கமுதி அருகே கோட்டைமேட்டில் விளைந்த நெல்லிக்காய்களை அறுவடை செய்து, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தரம்பிரிக்கும் தொழிலாளா்கள்.

கமுதி அருகே கோட்டைமேடு, கிளாமரம், க.விலக்கு, காவடிபட்டி ஆகிய பகுதிகளில் நெல்லி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு பெய்த தொடா் மழையின் காரணமாக நெல்லி அதிகமாக மகசூல் கிடைத்துள்ளது. இதனால் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு வடிவம் (சைஸ்) வாரியாக நெல்லிக்காய்கள் தரம்பிரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யபடுகிறது. போதிய விலை கிடைக்காவிட்டாலும், வெளி மாநிலங்களுக்கு கிலோ ரூ. 150 -க்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com