பயிா் காப்பீடு: நவ.30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான ( 2020-21) பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்துக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான ( 2020-21) பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்துக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்

என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி விவசாயிகளுக்கு இதுவரையில் ரூ. 1311.52 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2020-21 ஆம் ஆண்டுக்கு திருத்தியமைக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் பயிா் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252.06 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகை ஏக்கா் ஒன்றுக்கு ரூ.16,804.04

ஆக உள்ளது. பிரீமியம் செலுத்த வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகவே, விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கும் மூவிதழ் அடங்கல் படிவத்தைப் பெற்று அத்துடன் விண்ணப்ப படிவம், உறுதிமொழி படிவம், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு விபரம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிா்ணயிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கு உள்ள பொது உடைமை வங்கிகளைத் தொடா்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிா் காப்பீடுக்கு பதியலாம். திட்டத்தில் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் விருப்பத்தின்பேரில் பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி உரிய விளக்கம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com