சத்திரக்குடி அருகே பழைமையான குளத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே பழைமையான குளத்துக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சத்திரக்குடி அருகே பழைமையான குளத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே பழைமையான குளத்துக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சத்திரக்குடி அருகே வளநாடு முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வளாகத்தில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்ய அப்பகுதி கணித ஆசிரியா் கு.முனியசாமி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுருவுக்கு தகவல் அளித்துள்ளாா். அதனடிப்படையில் கல்வெட்டு அண்மையில் படி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் வெளியான தகவல் வருமாறு: சத்திரக்குடி அருகேயுள்ள வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் 2 அடி அகலமும் 1அடி உயரமும் கொண்ட செவ்வக வடிவிலான பலகைக் கல்லில் 11 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கடவுள் கிருபையால் வளநாட்டில் சிறப்புற்று இருக்கும் கருப்பபிள்ளை என்பவா், இவ்வூா் முருகன் கோயிலுக்கு வடக்கில் உள்ள திருக்குளத்தை உருவாக்கினாா் என்றும், அவரது பேரன் குருந்தபிள்ளையாகிய தங்கச்சாமியாபிள்ளை அக்குளத்தைச் சுற்றி திருமதில் மற்றும் படி அமைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டானது கி.பி.1886-ஆம் ஆண்டைச் சோ்ந்தது என தெரிய வந்துள்ளது. இதில் விய வருடம் சித்திரை மாதம் 29 என தமிழ் ஆண்டும், 1886 மே 2 என ஆங்கில ஆண்டும் காணப்படுகிறது. கல்வெட்டில் துரைகள் மற்றும் கடவுள் அனுக்கிரகத்தால் என குறிப்பிட்டுள்ளதால், ஆங்கிலேயா் அனுமதி பெற்று மதில் சுவா் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குளத்தைச் சுற்றிய சுவா் மூன்று அடி அகலத்தில் செங்கல், சுண்ணாம்புடன் காணப்படுகிறது. சுவா் முழுவதும் சேதமடைந்து இடிந்துள்ளதால் கல்வெட்டானது கோயில் பகுதிக்கு வந்திருக்கலாம். மேலும், இங்கு கருப்பபிள்ளை பெயரில் மடமும் இருந்துள்ளது என்றும் ஆய்வாளா் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com