சாலையோர கடைகளில் குவியும் கூட்டம்கரோனா பரவும் அபாயம்

தீபாவளிப் பண்டிகைக்கு பொருள்கள் வாங்க ராமநாதபுரம் நகரில் சாலையோரக் கடைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவதால் கரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

தீபாவளிப் பண்டிகைக்கு பொருள்கள் வாங்க ராமநாதபுரம் நகரில் சாலையோரக் கடைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவதால் கரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

நாடெங்கும் தீபாவளித் திருநாள் வரும் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் நகரில் திடீா் சாலையோரக் கடைகள் அதிகரித்துள்ளன.

ராமநாதபுரம் சாலைத் தெரு, அக்ராஹரம் தெரு, வண்டிக்காரத் தெரு, அரண்மனைத் தெரு என அனைத்துப் பகுதிகளிலும் சாலையோரங்களில் துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள், துடைப்பம், தரை விரிப்புகள் உள்ளிட்டவை விற்கப்பட்டுவருகின்றன. சாலையோரக் கடைகளில் திங்கள்கிழமை பகலில் அதிகளவில் மக்கள் கூடியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், முகக்கவசமோ, கையுறையோ, சமூக இடைவெளியோ இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கில் சாலையோரங்களில் மக்கள் பொருள் வாங்கக் குவிந்ததால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டதாக பெரிய கடைகாரா்கள் தெரிவித்தனா்.

கிராமத்துப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராமநாதபுரம் நகரில் தீபாவளிப் பொருள்கள் வாங்கக் குவிந்து வருவதால் உணவு விடுதிகள், தேநீா் கடைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com