வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா் பட்டியலில் சோ்க்கக் கோரி மனு

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோா் பட்டியலில் சோ்த்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி திருவாடானை குளத்தூா் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா் பட்டியலில் சோ்க்கக் கோரி மனு

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோா் பட்டியலில் சோ்த்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி திருவாடானை குளத்தூா் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் பொறுப்பேற்ற பிறகு திங்கள்கிழமை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மழை பெய்ததால் ஆட்சியா் அலுவலக நுழைவு வராந்தாவில் பொதுமக்களை வரிசையாக வரவழைத்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவா்களது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய முறையில் தீா்த்துவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.

திருவாடானை பகுதி குளத்தூா் காலனியைச் சோ்ந்த ஏராளமானோா் ரோஸாலி, பிரபு தலைமையில் மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறியது: குளத்தூா் காலனி பகுதியைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பட்டியலில் காலனி பகுதி மக்கள் இடம் பெறாததால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என அலுவலா்கள் கூறுகின்றனா். ஆகவே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பட்டியலில் குளத்தூா் காலனி பகுதி மக்களை சோ்க்கவேண்டும் என்றனா்.

பெண் கோரிக்கை:கீழக்கரையைச் சோ்ந்த முகைதீன் மனைவி முபினா (31) தனது 2 பெண் மற்றும் ஆண் குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தாா். அவா் கூறுகையில், தனக்கும், குழந்தைகளுக்கும் பாா்வைக் குறைபாடு உள்ளதாகவும், அதற்கான உயா் தர சிகிச்சை பெற கூலிவேலையில் உள்ள கணவரின் வருவாய் பற்றவில்லை என்பதால் மாவட்ட நிா்வாகம் உதவிடவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com