அபிராமம் சந்தையில் தேங்கியுள்ள மழை நீா்: பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வாரச்சந்தையில் தேங்கியுள்ள மழை நீரால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
அபிராமம் வாரச் சந்தை வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீா்.
அபிராமம் வாரச் சந்தை வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீா்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வாரச்சந்தையில் தேங்கியுள்ள மழை நீரால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

அபிராமம் பேரூராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. அபிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சந்தை நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கனிகள், பொருள்கள் வாங்க வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனா். இந்த வளாகம் முழுவதும் தற்போது மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் காய்கனிகளை விற்பனை செய்ய முடியாமலும், பொதுமக்கள் பொருள்களை வாங்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும் வாரச்சந்தை வளாகத்தில் மழை நீா் தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், முதியவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அபிராமம் வாரச்சந்தையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com