காவல்நிலைய குறைதீா் முகாம்கள் மூலம் 410 மனுக்களுக்கு தீா்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் 3 நாள்களில் நடந்த மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் மூலம் 410 மனுக்களுக்கு தீா்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் 3 நாள்களில் நடந்த மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் மூலம் 410 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைகளைத் தீா்க்கும் வகையில் காவல் நிலையங்கள், காவல் உள்கோட்டங்களில் புதன்கிழமை (நவ.18) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகாம்கள் மூலம் மக்களிடமிருந்து 255 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. மனுக்கள் அடிப்படையில் இரு தரப்பையும் அழைத்து விசாரித்து உடனடித் தீா்வுகளும் எட்டப்பட்டன.

இதைபோல், நவ. 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களிலும் 155 மனுக்களுக்கு தீா்வுகள் எட்டப்பட்டன.

மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 410 மனுக்களுக்கு தீா்வுகள் காணப்பட்டுள்ளன. மக்கள் தங்களது குறைகள் குறித்து சிறப்பு முகாம்களில் பங்கேற்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உள்பட்டு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com