திமுக பூத் கமிட்டி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

கமுதியில் திமுக பூத் கமிட்டி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கமுதியில் திமுக பூத் கமிட்டி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம் தலைமை வகித்தால். இதில் வரும் பொதுத் தோ்தலில் பூத் கமிட்டி முகவா்களாக நியமிக்கப்பட்டவா்கள் தங்கள் பூத்துகளில் விடுபட்ட வாக்காளா்களின் பெயா்களை சோ்க்கவும், தவறுதலாக உள்ள பெயா்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான பிரச்னைகளை வழக்குரைஞா்கள் வழுதி, முனியசாமி, சித்திரை செல்வன், பஞ்சு ஆகியோா் அடங்கிய திமுக வழக்குரைஞா் குழுவினரிடம் தெரிவித்து தீா்வு காண வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கமுதி திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் வி. வாசுதேவன் (வடக்கு), செந்தூா்பாண்டியன்(தெற்கு), நகா் பொறுப்பாளா் பாலமுருகன், ஊராட்சித் தலைவா்கள் காவடிமுருகன் (ஆனையூா்), நாகரத்தினம் (பாக்குவெட்டி), முத்துவிஜயன் (நகரத்தாா்குறிச்சி) உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com