தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற3 பேருக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத் தொகை ஆட்சியா் வழங்கல்

தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியா் 3 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளி

தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியா் 3 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2018-2019 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான தேசிய 64 ஆவது கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அப் போட்டிகளில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மாநில அணி சாா்பில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பங்கேற்ற ஏ.எஸ். தாமோதரா தங்கம் வென்றாா். அவருக்கு ரூ.2 லட்சம் மற்றும் அதே போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவு குண்டு எறிதலில் தங்கம் வென்ற வி. மதுமிதாவுக்கு ரூ.2 லட்சம் மற்றும் அப்பிரிவில் 17 வயதுக்குள்பட்டோா் குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ம. சா்மிளாவுக்கு ரூ.1 லட்சம் என 3 பேருக்கும் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலைகளை, மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் து. செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com