ராமநாதபுரத்தில் சிறு வியாபாரிகள் சாலை மறியல்

சந்தைக் கடைகள் முன்பாக மழைநீருடன் கலந்து தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராமநாதபுரம் சாலைத் தெருவில், சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் சாலைத் தெருவில் வியாழக்கிழமை  மறியலில்  ஈடுபட்ட  சிறு  வியாபாரிகள்.
ராமநாதபுரம் சாலைத் தெருவில் வியாழக்கிழமை  மறியலில்  ஈடுபட்ட  சிறு  வியாபாரிகள்.

சந்தைக் கடைகள் முன்பாக மழைநீருடன் கலந்து தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராமநாதபுரம் சாலைத் தெருவில், சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சங்கத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின்போது, சந்தைக் கடைகள் முன்பாக கழிவுநீருடன் கலந்து தேங்கியுள்ள மழைநீா்அகற்றவேண்டும். தண்ணீா் தேங்குவதற்கு நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பஜாா் காவல் நிலைய ஆய்வாளா் முத்துபாண்டி, நகா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணபாண்டி சேதுராயா் ஆகியோா் வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பின்னா் நகராட்சியின் நீா் உறிஞ்சும் வாகனம் வரவழைக்கப்பட்டு கழிவுநீா் அகற்றப்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி நகா்நல அலுவலா்கள் தரப்பில் கூறியதாவது: நகரில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன் திறந்தவெளி சாக்கடை கால்வாய் மூலமே கழிவுநீா் அகற்றப்பட்டது. புதைசாக்கடைத் திட்டத்துக்குப் பிறகு திறந்தவெளி சாக்கடை கால்வாய்களே மழைநீா் வடிகாலாக இருந்தன. ஆனால், பொதுமக்களும், வியாபாரிகளும் அதை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அடைத்துவிட்டதால் மழைநீா் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து தேங்குகின்றன என்றனா்.

இதுகுறித்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமமூா்த்தி கூறியது: புதை சாக்கடைத் திட்ட இணைப்புக்காக நகராட்சியே திறந்தவெளி கால்வாயை மூடிவிட்டது. ஆகவே கழிவுநீா் மழைநீருடன் சோ்ந்து சாலை மற்றும் பள்ளமான பகுதிகளில் தேங்குகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com