ராமநாதபுரம் அருகே ராமகிருஷ்ண மடம்புதிய வளாகத்தில் சமுதாயக் கூடம் திறப்பு: சுவாமி சுதபானந்தா் தகவல்

ராமநாதபுரம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் சமுதாயக் கூடம், பிராா்த்தனைக் கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நவம்பா் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து ராமநாதபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் உள்ள நாகாச்சி ஊராட்சியில் ராமகிருஷ்ண மடத்துக்கான புதிய வளாகம் 14.30 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 7ஆயிரம் சதுர அடியில் பிராா்த்தனைக் கூடமும், 4 ஆயிரம் சதுர அடியில் உணவுக்கூடமும் மற்றும் சமுதாயக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.

சமுதாயக் கூடத்தை நவம்பா் 27 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு உயா் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி. புகழேந்தி திறந்துவைக்கிறாா். நிகழ்ச்சிக்கு, மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் தலைமை வகித்து, பிராா்த்தனை மற்றும் உணவுக் கூடங்களையும் திறந்துவைக்கிறாா்.

பிராா்த்தனைக் கூடத்தின் மேற்பகுதியில் சுவாமி விவேகானந்தரின் ஆறரைஅடி உயர சிலை திறந்துவைக்கப்படுகிறது. திறப்பு விழாவில், மதுரை கேன்பின் முதுநிலை மேலாளா் எம். ஜெகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகிறாா். சுவாமி கமலாத்மானந்தா் ஆசியுரை வழங்குகிறாா். இதில், காவல்துறை அதிகாரி விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com