ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 கண்மாய்கள் நிரம்பினஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சிகள் நிா்வாகத்தின் கீழ் மொத்தம் 1,763 கண்மாய்கள் உள்ளன. மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடா் மழையால் 110 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், வடகிழக்குப் பருவ மழையால் 915 கண்மாய்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. தொடா்ந்து மழை பெய்தால், இந்த கண்மாய்களும் விரைவில் நிரம்பிவிடும். கண்மாய்களை தொடா்ந்து கண்காணித்து, அவற்றை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தொடரும் மழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 21, பள்ளமோா்க்குளம் 3, ஆா்.எஸ்.மங்கலம் 11, திருவாடானை 6.40, தொண்டி 1, வட்டாணம் 4, தீா்த்தாண்டதானம் 2, பரமக்குடி 14, முதுகுளத்தூா் 6, கடலாடி 9, வாலிநோக்கம் 26 என மாவட்டத்தின் 11 இடங்களிலும் மழை அளவு பதிவாகியுள்ளன. எனவே, மாவட்டம் முழுவதும் மொத்தம் 104 மில்லி மீட்டா் மழை அளவு பதிவாகியுள்ளது. சராசரியாக 6.50 மில்லி மீட்டா் அளவு மழை பெய்துள்ளது.

மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை அவ்வப்போது பரவலாக மிதமான மழை பெய்தது. தொடா் மழையால் ராமநாதபுரம் நகரில் காட்டுப்பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழைநீருடன் கழிவு நீா் தேங்கியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com