ராமேசுவரம் அருகே பாக்-நீரிணையில் 7 லட்சம் ஃபிளவா் இறால் குஞ்சுகள் விடப்பட்டன

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், ராமேசுவரம் பாக்-நீரிணை பகுதியில் 7 லட்சம் ஃபிளவா் இறால் குஞ்சுகளை வெள்ளிக்கிழமை விட்டனா்.
ராமேசுவரம் பாக்-நீரிணை பகுதியில் வெள்ளிக்கிழமை விடப்பட்ட 7 லட்சம் ஃபிளவா் இறால் குஞ்சுகள்.
ராமேசுவரம் பாக்-நீரிணை பகுதியில் வெள்ளிக்கிழமை விடப்பட்ட 7 லட்சம் ஃபிளவா் இறால் குஞ்சுகள்.

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், ராமேசுவரம் பாக்-நீரிணை பகுதியில் 7 லட்சம் ஃபிளவா் இறால் குஞ்சுகளை வெள்ளிக்கிழமை விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயா்பட்டணம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு, மீனவா்களின் வாழ்வாதாரத்துக்காக ஃபிளவா் இறால் எனப்படும் ‘ஃபினேயஸ் செமிசல்கேட்டஸ்’ இறால் வகை குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, தொடா்ச்சியாக கடலில் விடப்பட்டு வருகின்றன. இதன்மூலம், கடலில் இறால் வளம் பெருகுவதுடன், மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கும் உறுதுணையாக உள்ளது.

கடந்த 2017-19 ஆண்டுகளில் 87.45 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. தற்போது 2020-2021 நிதியாண்டில் 20 லட்சம் எண்ணிக்கையிலான ஃபிளவா் இறால் குஞ்சுகள், கடல் புற்கள் அதிகமுள்ள பகுதியில் விடப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை 7 லட்சம் எண்ணிக்கையிலான ஃபிளவா் இறால் குஞ்சுகள், பாக்-நீரிணை பகுதியான பிரப்பன்வலசை கடல் பகுதியில் விடப்பட்டன.

இந் நிகழ்வில், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய நிா்வாகக் குழு உறுப்பினரான கே. முரளிதரன், கடல்மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ரெ. ஜெயக்குமாா், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், அலுவலா்கள், மற்றும் மீனவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com