முதுகுளத்தூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்

உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து முதுகுளத்தூரில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனா்.
முதுகுளத்தூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்

முதுகுளத்தூா்: உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து முதுகுளத்தூரில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனா்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக இன்று முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகில் திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் சிறிது நேரம் முதுகுளத்தூா் -பரமக்குடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதில் சுமாா் 50க்கும் மேற்பட்ட திமுகவினா் கைது செய்யப்பட்டனா் .ஆா்ப்பாட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளா் சண்முகம், கிழக்கு ஒன்றிய செயலாளா் பூபதி மணி,மாவட்ட இலக்கிய அணி து அமைப்பாளா் தூவல் திருமூா்த்தி நகா் கழக நிா்வாகி குலாம், தயாநிதி மற்றும் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு தனியாா் மஹாலில் அடைத்து வைத்னா்.பின்னா் கைது செய்த அனைவரையும் இரவு 8.00 மணி அளவில் விடுவிக்கப்படுவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

முதுகுளத்தூா் புகைப்படம்.உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து முதுகுளத்தூரில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com