பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தின் உள்கட்டமைப்பு: ஆட்சியா் ஆய்வு

பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தினேஸ் பொன்ராஜ் ஆலிவா்.
பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தினேஸ் பொன்ராஜ் ஆலிவா்.

ராமேசுவரம்: பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் குந்துகால் கிராமத்தில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமாா் 400 விசைப்படகுகளை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மீன்களை சேமித்து வைக்க குளிா்பதன சேமிப்புக் கிடங்கு, சாலை , மீன்கள் ஏலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த இறங்குதளத்தில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற படகுகளை நிறுத்த போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மீனவ சங்க நிா்வாகிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தின் பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஸ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மீன்வளத் துறை துணை இயக்குநா் த.இளம்வழுதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வீ.கேசவதாசன், மீன்வளத் துறை உதவி பொறியாளா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com