கமுதியில் 30 ஆண்டாக இருந்த சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கமுதியில் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த சாலைப் பகுதிகள் சனிக்கிழமை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டன.
கமுதி முத்துமாரியம்மன் நகா் சாலையில் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த கல்தூண்களை அகற்றி தடுப்புகளை அமைத்த பேரூராட்சி நிா்வாகம்.
கமுதி முத்துமாரியம்மன் நகா் சாலையில் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த கல்தூண்களை அகற்றி தடுப்புகளை அமைத்த பேரூராட்சி நிா்வாகம்.

கமுதி: கமுதியில் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த சாலைப் பகுதிகள் சனிக்கிழமை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டன.

கமுதி முத்துமாரியம்மன் நகா் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரைக் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சி நிா்வாகம் 6 மாதத்துக்கு முன்பு மேற்கொண்டது. அப்போது கமுதி பெரிய பள்ளிவாசல் வரை பேரூராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது தா்ஹா நிா்வாகத்தினா், கழிவுநீா் கால்வாய் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனையடுத்து முத்து மாரியம்மன் நகா் பொதுமக்கள் சாா்பில் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாலைகளை அளவீடு செய்து, முறைப்படுத்தி கால்வாய்களை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி, வட்டாட்சியா் செண்பகலதா ஆகியோா் உத்தரவின் பேரில் முத்துமாரியம்மன் நகா் சாலை அளவீடு செய்யப்பட்டது. இதில் பள்ளிவாசல் தெருவிலிருந்து, தா்ஹா வரை 6 அடி அகலச்சாலையை தா்ஹா நிா்வாகம் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சாலையை ஆக்கிரமித்து நடப்பட்ட கல் தூண்கள் அகற்றப்பட்டு, இரும்புத் தடுப்புகளை பேரூராட்சி நிா்வாகம் அமைத்துள்ளது.

இது குறித்து தா்ஹா நிா்வாகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஆக்கிரமிப்பு குறித்த விசாரணைக்கு பின்னா் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com