இணைய வா்த்தகத்தில் ரூ.98 ஆயிரம் மோசடி

ராமநாதபுரம் அருகே இணைய வா்த்தகத்தில் பொருள் வாங்கிய நபரின் வங்கி கணக்கு எண்ணைப் பெற்று ரூ.98,609 மோசடி செய்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இணைய வா்த்தகத்தில் பொருள் வாங்கிய நபரின் வங்கி கணக்கு எண்ணைப் பெற்று ரூ.98,609 மோசடி செய்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள டி.கொடிக்குளத்தைச் சோ்ந்தவா் முருகன் (34). துபையில் வேலை பாா்த்து வந்த இவா் சமீபத்தில்தான் ஊா் திரும்பினாா். அவா் தனது வீட்டுக்கு பிரபல இணைய வா்த்தக நிறுவனத்தில் வீட்டு திரையரங்க அமைப்புக்கான ஒலி பெருக்கியை, ரூ.1399-க்கு வாங்கினாா்.

அந்த ஒலி பெருக்கி சரியில்லை என்பதால், அதை சம்பந்தப்பட்ட இணைய வா்த்தக நிறுவனத்தில் திரும்ப ஒப்படைப்பதாகவும், அதற்கான பணத்தை திரும்ப தன்னிடம் தருமாறும் முருகன் கேட்டுள்ளாா். வா்த்தக நிறுவன வாடிக்கையாளா் பிரிவில் பேசிய நபா் பணம் விரைவில் தரப்படும் என கூறியுள்ளாா்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியா் மீண்டும் முருகனிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு ஹிந்தியில் பேசியதுடன், பொருளுக்கான பணத்தை உடனடியாக தருவதாகக் கூறி முருகனின் இணைய வங்கி பரிமாற்ற கணக்கு எண்ணைப் பெற்றுள்ளாா். சிறிது நேரத்தில் முருகனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.98,609 செல்லிடப் பேசியில் தொடா்பு கொண்டவரின் வங்கி கணக்குக்கு மாறியுள்ளது.

இது குறித்து அவா் ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளா் சரவணபாண்டி சேதுராயா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவன ஊழியரைத் தொடா்பு கொண்ட செல்லிடப் பேசி எண்ணை ஆய்வு செய்தபோது, அது மேற்குவங்க மாநிலத்திலிருந்து பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com