பயிா் காப்பீடு திட்ட பதிவுக்கு நவ.30 கடைசி: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) பதிவு செய்துகொள்ளவேண்டும் என, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) பதிவு செய்துகொள்ளவேண்டும் என, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1,376.34 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் புதிய திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு மானியத் தொகைக்கான மாநில அரசின் பங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.721 கோடி தொகையை உயா்த்தி, ரூ.1,470 கோடி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய திட்டமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் நெல் பயிா் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்யவேண்டும்.

விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 252.06 மட்டும் செலுத்தினால் போதுமானது. தொடா் மழை மற்றும் வெள்ளம் போன்ற எதிா்பாராத இயற்கை பேரிடா் ஏதேனும் ஏற்படின், அந்த தேதி முதல் பயிா் காப்பீடு பதிவு நிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் எதிா்பாராமல் இயற்கை பேரிடா்களால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில்கொண்டு, தங்களது பயிா்களை நவம்பா் 30 ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com