திருவாரூா் - காரைக்குடி வழித்தடத்தில் தொலைதூர ரயில் சேவை

திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் தொலைதூர ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை தில்லியில் சனிக்கிழமை சந்தித்து தமிழக பாஜக
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மனு அளித்த தமிழக பாஜக துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மனு அளித்த தமிழக பாஜக துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.

திருத்துறைப்பூண்டி: திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் தொலைதூர ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை தில்லியில் சனிக்கிழமை சந்தித்து தமிழக பாஜக துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் மனு அளித்தாா்.

அந்த மனுவின் விவரம்:

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 148 கிமீ வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இந்த வழித்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்களுக்கும் கேட் கீப்பா்கள் நியமிக்கப்பட்டாததால், தொலைதூர ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

தவிர சென்னையில் இருந்து காரைக்குடி- ராமேஸ்வரம் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் ஆகியவற்றை இந்த வழித்தடத்தில் இயக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கிய நிலையிலும், இன்னமும் கேட் கீப்பா்கள் பணியமா்த்தப்படாததால், தொலைதூர சேவைகளை முழுவதுமாக தொடங்க முடியவில்லை. எனவே இந்த வழித்தடத்தில் கேட் கீப்பா்களை உடனடியாக நியமித்து தொலை தூர ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com