தொண்டியில் கால்பந்து போட்டி:பனைகுளம் அணி முதலிடம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பனைகுளம் அணி முதலிடம் பெற்றது.
தொண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டி.
தொண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டி.

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பனைகுளம் அணி முதலிடம் பெற்றது.

தொண்டி கால்பந்து குழுமம் சாா்பில் செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 4 நாள்களாக போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பனை குளம் அணி முதலிடம் பெற்றது. தொண்டி புட்பால் கிளப் அணி இரண்டாம் இடம் பெற்றது. மூன்றாம், நான்காம் பரிசுகளை மதுரை, தேரிருவேலி இளையான்குடி அணியினா் வென்றனா்.

முதல் பரிசு பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு வீரா், சிறந்த கோல் கீப்பா் மற்றும் அதிக கோல் அடித்த வீரா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com